Wednesday, October 26, 2011

"அம்பேத்கரும் அவதூருகளும் - ஜெய மோகனுக்கு மறுப்பு " - பா.பிரபாகர்

"அம்பேத்கரும் அவதூருகளும் - ஜெய மோகனுக்கு மறுப்பு " - பா.பிரபாகர் இன் புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.

தமிழலகத்தில் மட்டும் அல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிலேயும் மறைக்கப்படுகிற ஒரு தலைவர் அம்பேத்கர் அவர்கள். ஜெயமோகன் போன்றோர்களால் தொடர்ந்து பரப்படுகிற காந்திய கொள்கை / மறைக்கப்படுகிற அம்பேத்கரின் போராட்டம், வெகுசன தொடர்பு சாதனங்களில் பதிவு செய்யபடுவதில்லை என்பதில் எனக்கும் நிறைய வருத்தம் உண்டு.

அதை பிரபா வின் இந்நூல் பெரும் தரவு கொண்டு போக்குகிறது. 70 பக்க ஒரு புத்தகத்திற்காக இவரின் வாசிப்பும், தேடலும் அதன் அடிக்குறிப்புகளில் இருந்து அடையாளம் காண முடிகிறது.

காந்தியை பற்றி நம் பொது புத்தியில் இருக்கும் எல்லா நினைவுகளையும், இந்த புத்தகம் கேள்வி கேக்கிறது. சில கேள்விகள் உங்கள் சிந்தனையையும் மாற்றும் என்ற நம்பிக்கையில் இங்கே பதிவு செய்கிறேன்.

* காந்தியை ஒட்டு மொத்த இந்தியாவின் தலைவராகவும், தந்தையாகவும் பார்க்கும்போது, அம்பேத்கரை அப்படி பார்க்க இயலாமல் போவதற்கு தடையாக இருப்பது எது ?

* இந்தியாவை விட்டு இங்கிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும் சுமார் 23 ஆண்டுகள் இருந்து விட்டு 1915 ம் ஆண்டு இந்தியா வந்த காந்திக்கு உடனே தாகூர் ஏன் "மகாத்மா" எனும் பட்டத்தை கொடுத்தார் ? இந்த கால கட்டத்தில் காந்தி தீண்டாமையை ஒழித்திருந்தரா ? இல்லை இந்தியாவிற்கு சுதந்திரம் பெரும் முயற்சி வெற்றி பெற்று விட்டதா?

* வெளி நாட்டிலிருந்து வந்தபிறகு இந்தியாவை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் போனார். ஆசிரமம் தொடங்கினார். 1920 களில் தான் இந்திய அரசியலில் முழுமையாக ஈடுபட்டார். 1920 இலிருந்து வட்ட மேசை மாநாடு தொடங்கிய 1930 வரைக்கும், காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதி தான் என்பதை உறுதிபடுத்துவதற்கு எத்தகைய செயற்பாடுகள் இருந்தது?

* தாழ்த்தப்பட்டவர்களின் மகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய நீரெடுப்பு போராட்டத்தின் போதும், நாசி கோவில் நுழைவு போராட்டத்தின் போதும், காந்தி என்ன செய்து கொண்டிருந்தார்? தன்னுடைய ஆதரவை தெரிவித்தாரா?

* கோவில் நுழைவின் போது, சாதிய இந்துக்கள் மிக கடுமையாக நடந்து கொண்ட போது ஏன் அதைப்பற்றி காந்தி வாய் திறக்கவேயில்லை ?

* தீண்டாமை எதிர்ப்பு எனும் பெயரில்லிருந்து ஹரிஜன சேவை எனும் பெயர் மாற்றத்தை தன்னுடைய அமைபிற்கு ஏன் செய்தார்?

* சாதி வேண்டாம்,வர்ணம் வேண்டும் எனும் கொள்கையிலிருந்து காந்தி எப்போது விடுபட்டார்? சாதியின் பிறப்பிடமான இந்து சமயத்தை எபோதாவது விமர்சனம் செய்தாரா?

* ஹர்ஜன சேவை சங்கத்தின் தொடர் செயற்பாடுகளுக்கு அம்பேத்கர் ஆலோசனைகள் வழங்கிய போது ஏன் அவைகள் நிராகரிக்கப்பட்டன?

* பூனா ஒப்பந்தத்திற்கு பிறகு ஹரிஜன சேவை சங்கம்(தீண்டாமை எதிர்ப்பு குழு என்கிற பெயரிலிருந்து ஹரிஜன சேவை சங்கம் என்று பெயர் மாற்றினார். ஏனெனில் காந்திக்கு எதிர்ப்பதை விட சேவை தான் பிடித்த ஒன்று) தொடங்கியதற்கு பிறகு தாழ்த்தப்படவர்கள் மீது நடந்த வன்கொடுமைகளில் காந்தியின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? சாதி இந்துக்கள் சார்பாக பேசினாரா?இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக பேசினாரா?

* சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அம்பேத்கரின் சவ்தார் குள போராட்டத்தை போன்று அல்லது காலாராம் கோயில் நுழைவு போன்ற ஏதேனும் ஒரு போராட்டத்தை காந்தியின் தலைமையின் கீழ் நீங்கள் குறிப்பிடமுடியுமா?

* கலப்பு மணம், கலந்து உண்ணல் போன்றவை தனிநபர் விருப்பம் சார்ந்தவை அதற்கும் சாதி ஒழிப்பிற்கும் தொடர்பில்லை என்றும்; திருமணங்கள் ஒரே சாதிக்குள் தான் நடக்க வேண்டும் என்றும் கூறிய காந்தி பிற்காலத்தில் கலப்பு மணத்தை ஆதரித்தது எவ்வாறு நிகழ்ந்தது? ஆன்மிக வழியில் கிடைத்த முக்தியா? அல்லது அம்பேத்கருடன் தொடர்ச்சியாக நடந்த விவாதத்தில் கிடைத்த உள்ளுணர்வா?

* ஜெகஜீவன்ராமை காங்கிரஸ் வளர்தெடுதமைக்கு காரணம் தலித்துகளின் அரசியல் வளர்சியின் மீதுள்ள அக்கறையின் காரணமா? அல்லது மிகவும் வளர்ந்து கொண்டிருந்த அம்பேத்கரின் செயல்பாட்டை முடக்குவதற்காகவா?

* நாங்கள் இந்து சமூகத்திலிருந்து வேறுபட்ட தனித்த ஒரு சிறுபான்மை இனம் என்று ஒட்டுமொத்த தலித்துகளையும் அடையாளப்படுத்திய அம்பேத்கரின் கூற்றுக்கு மாறாக எந்த அடிப்படையில் தலித்துகள் இந்து சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை ஏன் காந்தி ஒரு முறை கூட விளக்கவேயில்லை ?

* தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதி முறையை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் இருந்த போது, தனித்தொகுதி வழங்கிய அன்றைய பிரிட்டிஷ் அரசை எதிர்த்து உண்ணாவிரதத்தை மேற்கொள்ளாமல் ஏன் அம்பேத்கரை நோக்கி அவருடைய உண்ணாவிரதம் அமைந்தது?

சிறந்த இந்து, இழிந்த இந்து இருக்கலாம். ஆனால் நல்ல இந்து என்று யாரும் இல்லை என்று அம்பேத்கர் கூறுவார். இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை தேடும் போது காந்தி எப்படிப்பட்ட இந்துவாக இருந்தார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள இயலும். மேலும் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த ஆளுமைகளின் பங்கை புரிந்து கொள்வது மட்டுமல்ல;தலித்துகளின் எதிர்கால அரசியல் சமூக விடுதலைக்கு உதவப்போவது அம்பேத்கரா? காந்தியா? என்பது விளங்கும்.

Tuesday, August 16, 2011

வந்தே மாதரம் !...


நீங்களோ நானோ விசாரணைக்கென்று அழைத்துசெல்லப்படலாம்.

புனையப்பட்ட கதைகளில் குற்றவாளியென அறிவிக்கப்படலாம்.

பிறகெப்போதும் வீடு திரும்பாமல் போகலாம்.

வாழ்வின் முழுமையையும் சிறைக்கம்பிகளில் தொலைக்கலாம்.

ஒரு நீதி நாளில் தூக்கிலிடப்படலாம்.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் 'சதுரங்கத்தில்'

நாம் வேட்டையாடப்படாதவரை சுதந்திரம் தான்....

கொண்டாடுங்கள்.... !

( பேரறிவாளனின் நிலையை முன் வைத்து.)


-- சுகுமார்..