Thursday, June 8, 2017

திருட்டு !..

திருட ஒன்றும் இல்லாதவன் வீட்டின் கதவுகளாய்,
திறந்தே கிடக்கிறது
என் மனது.

நீ திருட வருவாய் என !...

Friday, February 17, 2017

மாட விட, வளக்குறவன் முக்கியம்...

எல்லாத்துக்கும் போராடுறவன், சல்லிக்கட்டுக்கும் வந்தா
ஆதரிக்கலைனாலும் எதுக்கக்கூடாது ...

எதுக்குமே பொங்காதவன் சல்லிக்கட்டுக்கு பொங்குன்னா
எதுக்கலைனாலும், ஆதரிக்க கூடாது ..

Friday, June 29, 2012

தலைப்பில்லாத கவிதை...

அந்தி மாலை
என் மடியில் அவள்.
உன் கன்னத்தில் 
ஒரே ஒரு அடி, அடிக்கவா ?
என்றேன்.

கொஞ்சம் தயக்கத்தோடு 
சரி என்றவாறு 
தலையசைத்தாள்.

செல்லமாக 
ஒரு கன்னத்தில் 
அறைந்தேன்..

அடுத்தகணம்
அவள் செய்கையால் 
அதிர்ந்தேன்.

ஒருவித நடுக்கத்தோடு 
கண்ணீரை துடைத்துக்கொண்டே 
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..

அவள்
பைபிளை படித்தறியாத
புத்தனை பற்றி தெரியாத,
அகிம்சை எனவென்றரியாத,
என் இரண்டு வயது மகள்.

//
செல்லமாக 
ஒரு கன்னத்தில் 
அறைந்தேன்..

சிரித்துக்கொண்டே 
daddy இந்த கன்னத்துல்ல அடி 
என்று இன்னொரு 
கன்னத்தைக் காட்டினாள்.

அடுத்தகணம்
அவள் செய்கையால் 
அதிர்ந்தேன்.

ஒருவித நடுக்கத்தோடு 
கண்ணீரை துடைத்துக்கொண்டே 
அவளை கட்டி பிடித்துக்கொண்டேன்..