Friday, December 11, 2009

ஏய் தோழா ! குடி கோலா !...

விளம்பர இடைவேளைகளுக்கு இடைல, t.v ல நேத்து ஒரு நிகழ்ச்சி பாத்துட்டு இருந்தேன்.
குடிகுறதுக்கு கஞ்சி இல்லாம, தொவச்சா கிழிஞ்சு போய்டும் அழுக்கு வேட்டியோட மல்லு கட்ற, நம்ம தமிழன பாத்து பெப்புசிய குடி, கோலாவ குடினு, நம்ம இளைய தளபதி பாடிகினு இருந்தாரு...
இவனுகளுக்கு பிளாச்சிமடைல , சொந்த நிலத்தோட நிலத்தடி நீர காப்பதுரதுக்காக இன்னைக்கும், நம்ம ஊரு போலீஸ் கிட்ட அடி வாங்கிக்கிட்டு, கோலாவுக்கு எதிரா போராடுற அப்பாவி பழங்குடி விவசாயிகள பத்தி கவலை இல்ல.
பெப்புசி,கோலானால, முடப்பட்ட எத்தனயோ சிறு தொழிற்சாலைகள பத்தியும், அந்த தொழிலாளர்களா பத்தியும் கவலை இல்ல.
நம்ம ஊரு தண்ணி , நாம ஊரு மூலதனம்,
நம்ம ஊரு தொழிலாளி ,நம்ம ஊரு இடம்,
வெறும் 40 பைசா செலவுல தயாரகுற ஒரு கருமத்த
10 ரூபாக்கு வாங்கி குடிச்சுட்டு , ஒட்டு மொத்த லாபத்தையும் அமெரிகவுக்கு அனுப்பிவைகுறதும் நம்ம ஊரு நாயகர்கள்.
இத பத்தியும் , எங்க இளைய தளபதிக்கும் ,சியானுக்கும் கவலை இல்ல .
ஏன் தலிவா, வேர்வ சிந்தி சம்பாதிச்ச காசுல,ஓம் படத்த பாத்துட்டு கை தட்ற குத்தத்துக்கு கண்ட கருமத்தை எல்லாம் குடிக்க சொல்லி ,வீட்டு முன்னாடி வந்து ஆடுறியே உனகெலாம் வெக்கமே இல்லையா.
தல நான் தெரியாமத்தேன் கேக்குறேன்,
யாரோ தெரியாத பசங்களுக்காக ஆட்டம் போடுற,
நம்ம சாதி சனம் ,இந்த மாப்ளை விநாயகரு சோடா,
காளி மார்க் கலர்க்கு ஒரு ஆட்டம் போட்டீனா ,
எதோ இல்லாத சனம் 2,3 ரூபாய்க்கு குடிச்சுபுட்டு சந்தோசமா இருப்போம்ல .
ம்ம் இதெலாம் உன் காதுல எங்க உளுகபோகுது , 50 லச்சத்துக்கு பெப்புசிய குடிக்க சொல்லலாமா?
1 கோடிக்கு கோலாவ குடிக்க சொல்லலாமா? 2 கோடிக்கு அமெரிக்ககாரனோட மூத்....... குடிக்க சொல்லலாமானு
யோசிச்சிகிட்டு இருப்பீங்க!
உங்கள சொல்லி குத்தமில்ல. கோக்கு இல்லாம மதிய சாப்பாடு சாப்பிட தெரியாத இந்த பயபிளைகல சொல்லனும்.
உங்க மேல எந்த தப்பும் இல்ல சாமி.
இதலாம் பாக்கும் போது, மதுரைல நான் படிச்சுகிட்டு, ஊர சுத்திக்கிட்டு இருந்தப்ப,கத்துகிட்ட ஒரு பாட்டு தான் நாபகம் வருது.

"நாடு முன்னேறுதுங்குறான் . நம்ம
நாடு முன்னேறுதுங்குறான். - அட
சினு சினு சினுக்கா,
மினு மினு மினுக்கா ,
செர்மன், அமெரிக்கா,,ஜப்பானு கணக்கா
நாடு முன்னேறுதுங்குறான்

தாகம் தீக்க கொக்க கோலா,
போத ஏத்த பாரின் சீசா,
மிக்சு பண்ணிக்க பெப்புசி லிகறு,
மித்த வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு.
குடிக்க தண்ணி இல்ல, கொபளிக்க பன்னீரு
குடிக்க தண்ணி இல்ல, கொபளிக்க பன்னீரு
அடிரா செருப்பால வீங்கிபுடும் செவுலு. - நாடு
நாடு முன்னேறுதுங்குறான். நம்ம
நாடு முன்னேறுதுங்குறான்......"
- இப்படி தான் என்ன மாதீரி வெட்டி பயலுக வேலை இல்லாம
உசுபேத்தி விடுவானுக,
நீ ஆடு தலைவா...

Sunday, December 6, 2009

எனக்கு தெரிந்த ஒரு போராளி !

நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெட்டியாய் பொழுதை போக்கி கொண்டிருந்த நாட்களில், பெண்ணியம், புரட்சி,சே, தலித்,மாவோ, எப்படி எத்தனை எத்தனையோ பினாத்தி கொண்டிருந்த, ஒரு பொழைக்க தெரியாத நண்பரின் அறிமுகம் அனாவசியமாக கிடைத்தது.
ஒரு NGO வில் தான் எங்களுக்கான புரிதல் தொடங்கியது.அவரின் பேச்சும், துடிப்பும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை தான்.ஒவ்வரு வாரம் சனி கிழமைகளில், விவாதிபதற்கு ஒரு தலைப்பு.அபோது அனேகமாக அவர் பேசுவது எதவும் புரியாது.கடமைக்காகவும் அவர் மீது கொண்ட நட்புக்காகவும் ஓட்டை பார்த்து கொண்டு உக்காந்து இருப்பேன்.
திண்டுக்கலுக்கும், மதுரைக்கும் தினமும் ரயிலில் பயண பட்டு வந்த என்னை பல இரவு பொழுதுகளில் மதுரை ரயில் நிலையத்தை சுற்றிலும், பெரியார் பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள பழைய புத்தக கடைகளுக்கு அவரின் சைகிலேலேயே அழைத்து சென்ற பெருமை அவரயே சாரும்.வைரமுத்து வை தவிர வேறொன்றும் வாசித்தறியாத இந்த கத்து குட்டிக்கு சே வையும் , அம்பேத்கரையும் அறிமுகபடுத்தினார்.
இத்தனைக்கும் தனக்கு ஒரு நிரந்தர வேலை கூட இல்லாமல் , இப்படி மக்கள் இயக்கங்களுக்காக அலைகிறாரே, இந்த ஆள், எங்க, வாழ்க்கைல முன்னேற போரார்னு நினைச்சு கிட்டே MCA படிக்க கிளம்பினேன். அப்பவும் அன்போட வழி அனுபிச்சு வச்சார்.
திருச்சிக்கு வந்த பிறகு,அவருடனான பரிச்சயம் கொறஞ்சது. ஆனாலும் அப்ப அப்ப போன்ல , என புக் படிச்ச அப்படினு விசாரிப்புகள் தொடர்ந்தது. வாழ்கையில எண்ணங்களும் , நோக்கங்களும் , ஒரு திட்டமிடுதலும் இல்லாத ஒரு சோம்பேறிய(நான் தான்) நம்பி ஒரு பொண்ணு வந்த போது, என் படிப்பு பாதி முடிஞ்சு இருந்தது. என்ன செய்யணும் னு தெரியாம, முதல போன் பண்ணி சொன்ன ஒரே ஆளு அவர் தான். அப்ப இருந்து என் கல்யாணம் (வேல கிடைச்ச பின்னாடி) முடிஞ்ச வரைக்கும் கூடவே இருந்த நண்பர்.
"பிரபாகரன் எனக்கு பிரபா சார்.." அவர எனக்கு தெரிஞ்ச 8 வருசத்துல துளி அளவு கூட அவரோட சொந்த வாழ்கை தரம் உயரல. ஆனா அவரோட செயல்பாடு, வாசிப்பு,கள பணி அதிகமாய்டே இருக்கு. பொண்ட்டாடி, பிளைகனு வந்த பிறகு கூட சொ(சோ)த்துக்கு வழி பண்ணாம, "போதி" னு ஒரு அமைப்ப ஏற்படுத்தி அங்க இருக்குற தலித் மாணவர்களுக்கு இலவசமா இங்கிலீஷ் ம், கம்ப்யூட்டர் ம் சொல்லி குடுக்குரதோட, அவுங்களுக்கான லைப்ரரி ஒன்னையும் ஆரம்பிச்சு இருகார்.
கடன் வாங்கி புத்தகம் வாங்குறதே பெருசா இருக்குற நமக்கு, வட்டிக்கு வாங்கி மக்கள் பணி நடத்துற இந்த ஆள பாத்தா பாவமா தான் இருக்கு. பேப்பர் கடைக்கு போடுற நமளோட பழைய புத்தகங்கள், பயன்படுத்துன கம்ப்யூட்டர், இன்னும் படிகுறதுக்கு உதவுற எல்லாத்தையும் இந்த அப்பாவிக்கு கொடுத்து உதவுங்கனு சொன்னா எவன் கேக்குறான். ("போதி" தொடர்புக்கு - BODHI 31.karumariyamman kovil st musiri.Trichy.dt 9942487859, 9444146273, 9791406600, 9994368508 )
இன்னைக்கு கூட அம்பேதரோட 53 நினைவு நாள்னு காலைல 6 மணிக்கே மெசேஜ் அனுப்பி இருந்தார். ம்ம் என்ன மாதிரி எதனபேத்துகு இப்படி அன்னுபுனரோ தெரியல. களத்துல எறங்கி சண்டை போடுரவனும், மக்கள் கள பண்ணிக்காக, குடும்பத்தோடும், வறுமையோடயும் சண்ட போடுற ஓவருதரும் ஒரு போராளி தான் !...

Monday, November 30, 2009

நவம்பர் 27

முதலில் காலம் கடந்து பதிவு செய்வதற்கு வருந்துகிறேன். இன்று பல நாடுகளிலும் மிக வெற்றி கரமாக நடந்து முடிந்த ஈழ தமிழர் களுக்கான மாவீரர் நினைவு நாள் நிகழ்ச்சி களை படித்தேன். ஒவ்வரு நாடுகளிலும் சிறப்பாக நடந்து முடிந்ததில் சற்று நிம்மதி. இறுதியாக தமிழ் நாட்டில் எப்படி நடந்தேறியது என்று ஆர்வமாக தேடினேன். அதிர்ந்து போனேன்.

ஒவ்வரு நாடுகளிலும் பிரமாண்டமான அரங்குகளில் அலங்கரிக்கப்பட்டு, ஒரு இனத்தின் எழுச்சிக்காக உயிரை கொடுத்த வீரர்களுக்கான நினைவு நாள். இது சாதரன நாடு பிடி சண்டை அல்ல. மானம் காக்க / இனம் காக்க வாழ்வை பணயம் வைத்த வீரர்களுக்கு நாம் செலுத்தும் ('இறுதி' என்று குட சொல்ல மாட்டேன்) அஞ்சலி. இறந்து போன ஒருவனுக்கு விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு நடத்த இது வழிபாட்டு தளம் அல்ல, ஈழத்தை / இனத்தை அடுத்த தலை முறைக்கு கொண்டுசெலும் புனித நாள்.

இந்த நிகழ்வு எப்படி இருக்க வேண்டும் ?

ஒரு வரலாறாக / புத்தி பேதலித்து திரியும் இந்த இளைகர்களுக்கான பாடமாக இருக்க வேண்டாமா? பிரான்ஸ் / லண்டன் / நார்வே / டொராண்டோ என்று எங்கிருந்தோ வந்தவர்கள் நமக்கான விழாவை முன்னெடுத்து செல்கிறார்கள்.

இவர்களை எல்லாம் விட ஏன் இலங்கை யை விடை ஈழத்துக்கு மிக அருகில் இருக்கும் நாம் எப்படி செயல் பட வேண்டும். ஒரு அரங்கு இல்லை / எதோ எழவு வீடு மாதிரி இருந்தது. யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இந்த அளவு நாம் .................... என்று மட்டும் சொலி விடாதீர்கள். என இல்லை நம்மிடம் ???

டீலா நோ டீலா ? கோலம் / மெட்டி ஒலி களில் நமக்கான நேரத்தையும் , காதலுக்காக மயிரையும் வாழ்வதற்காக வயிரையும் , you tube துடங்கி காதலிக்கு கவிதை எழுதும் blog களில் வாழ்க்கையும் ஒலித்து வைத்து இருக்கும் என் சம கால தோழர்களே, இனம் காக்க எரிந்து போன இவர்களின் தியாகத்திற்கான புனிதத்தை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்ல மறந்து விடாதிர்கள்.

குறைந்த பட்சம் உங்கள் எதிர்ப்பு உங்களிடம் இருந்தாவது தொடங்கட்டும். SO நமக்கான தேடலில் தொலைந்து போகிற நிமிஷங்களில், நமக்காக தொலைந்து போனவர்களையும் தேடுகிற நிசங்களுகாக செலவழிப்போம்.

Wednesday, October 7, 2009

10000 ரூபாயும், என் மனசாட்சியும் !

எங்கள் ஆபீஸ் இல் LTA என்று ஒரு திட்டம் உண்டு.
திட்டம் இது தான், குடும்பத்தோடு பயணம் செய்யும் பொது
பயணத்தொகையில் குறிபிட்ட அளவு office திரும்ப செலுத்தி விடும்.

என் முந்தய பயண சீட்டுகளை தேடி எடுத்ததில்
வெறும் 1200 ரூபாய் கு மட்டும் தேரியது.
(15000 வரை நான் apply பணிக்கலாம்)

சரி இந்த வருடம் 1200 போதும் என்று
application ஐ fullup செய்து கொண்டு HR ரிடம் சென்றேன்.
போகும் வழியில், ஹுசைன் அந்த application வாங்கி பார்த்தார்.
பொழைக்க தெரியாத பையனா இருக்கியே (!!!)
என்று திட்டி விட்டு, venki ஐ பார்க்க சொன்னார்.

venki இடம் ஒரு travel agent இன் தொலைபேசி எண் இருப்பதாகவும்,
அவரை contact பண்ணினால், நாம் விரும்பும் தொகைக்கு
டிக்கெட் களை வாங்கி கொள்ளலாம் எனவும் சொன்னார்.

மனசு குரங்கானது.
venki யிடம் போனேன்.

தனக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு தான்
travel agent ஐ தெரியும் என்று சொல்லி
கிருஷ்ண மோகன் னிடம் அனுப்பினர்.

எங்கள் அலுவலகத்தில்
கிருஷ்ண மோகன் ஐ
இதுவரை நான் பார்த்தும் இல்லை, பேசியதும் இல்லை.
ஆனால் என் கால்கள்
அவரை தேடி அலைய தொடங்கின.

ஆந்திரா வில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால்
தன் சொந்த ஊருக்கு சென்ற கிருஷ்ண மோகன்
மாட்டி கொண்டதால் விடுப்பில் இருப்பதாகவும்
வர 5 நாட்கள் ஆகும் எனவும், அவர் நண்பர்
காந்தி சொன்னார்.

நமக்கு தேவை கிருஷ்ண மோகன் இல்லை travel agent என்பதால்
அவரை தொலை பேசி வலி தொடர்பு கொண்டு, travel agent இன்
number ஐ பெற்றுவிடலாம் என்று எனக்கு புது யோசனை தோன்றியது.
அதை அமுல்படுத்தும் பொறுப்பை காந்தி இடமே ஒப்படைத்தேன்.

மறுநாள் காந்தி, என் இருக்கைக்கு வந்தார்.
கிருஷ்ணா வை தொடர்பு கொள்ள முடிய வில்லை என்று கூரி,
துளசி என்ற மற்றொரு அலுவலக நண்பரை
அறிமுகப்படுத்தினார்.

இறுதியாக துளசியிடம் இருந்து,
travel agent நம்பர் கிடைக்க பெற்றேன்.
தொலை பேசியில் அவரை தொடர்பு கொண்டேன்.

தன் பெயர் ராமா ரெட்டி எனவும்,
தானே என் அலுவலகத்திற்கு மாலை வருவதாகவும்
வேண்டிய பணத்திற்கு டிக்கெட் ஐ பெற்று கொள்ளலாம்.
அதற்கு வெறும் 2 சதவீதம் மட்டும் commison எனவும்
சொலிவிட்டு, தொடர்பை துண்டித்தார் ராமா ரெட்டி.

எதிபார்த்த படியே மாலை வந்தார்.
நான் 10000 ரூபாய்க்கு டிக்கெட் களை
வங்கி விட்டு, commision அக 200 கொடுத்தேன்.

மறுநாள் 1200 கு பதிலாக 10000 ஐ
application இல் எழுதி HR ஐ நோக்கி நடந்தேன்.

ஹுசைன் சிரித்தார்..
மனசு கனத்தது..

Tuesday, October 6, 2009

தமிழக அரசும், சினிமா விருதும்.

2007
சிறந்த படம் சிவாஜி
சிறந்த நடிகர் ரஜினி
2008
சிறந்த படம் தசாவதாரம்
சிறந்த நடிகர் கமல்
சிறந்த உரையாடல் - கலைஞர் (உளியின் ஓசை)

இதை பற்றி எழுதி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை.
ஆனால்
இதே காலத்தில் வந்த சசி ன் பூ
சசி குமாரின் சுப்ர மனிய புரம்
ராதா மோகன் ன் அபியும் நானும்
இப்படி எத்தனையோ சின்ன(budjet இல்) படங்கள்.

இந்த படங்களும் சரி / படைப்பாளிகளும் சரி
அரசு விருதை எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்

ஆனால் உரிய அங்கிகாரம் தர மறந்த
நம் அரசின் கைய்யாலாகாத் தனத்துக்காக
வெட்கபடுவோம்.

Monday, October 5, 2009

மழை காலமும், என் நாபக மறதியும்.

நான் வாழும் hyderabad இல்,
கடந்த 20 நாட்களாக அடை மழை.

எவ்வளவு விரைவாக எழுந்தாலும்,
officeக்கு late அக செல்பவர்களில் நானும் ஒருவன்.

ஒவ்வரு நாளின் அவசரங்களில்
குடையை மறக்காமல்
மறந்து விடுவேன்.

வீடு திரும்புகையில், இந்த பாழாப்போன மழை
காட்டி கொடுத்து விடுவதால்
மனைவியிடம் மாட்டி கொல்வேன்.

சில்வியா பிலாத்தின் 'சாவதும் ஒரு கலை' போல்
நமக்கு சமாளிப்பதும் ஒரு கலை என்பதால்
குடை மறந்த மழை நாளில் என் மனைவியிடம்
தப்பித்து விடுவேன்.

ஆனால் கடந்த 3 நாட்களாக அவளின்
அர்ச்சனை தாங்க முடியவில்லை.
(அவளும் சில்வியா வை படிதிருபபால் போல).
மழையும், அவளும் விடுவதாக இல்லை.
அன்று சண்டை சாரல் சொஞ்சம் கடுமையாகவே இருந்தது.

"நாளை முதல்" என்ற Condition bail இல்
அன்று விடுதலை ஆனேன்.

மறுநாள், மழையோடு வந்தது.
அவள், குடையோடு வந்தால்.
குடை கொடுத்த திருப்தியில் அவளும்,
மழை தவறிய விரக்தியில் நானும்
அலுவலகம் சென்றோம்.

எங்கே குடை யை நான் office லேயே
விட்டு விடுவேன் என்ற பயத்தில்
அவளிடம் இருந்து வந்த 2,3
தொலை பேசி அழைப்புகளுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில்
குடையோடு வீட்டுக்கு கிளம்பிநேன்.

மழையில் நிற்க முடியாமல்,
தலையில் துண்டை போட்டுக்கொண்டு பூ
விருக்கும் கிழவியை பார்த்து,
யாருக்கு பரிந்து பேசுவது என்று தெரியாமல்
பேருந்திலிருந்து இறங்கிநேன்.

லேசான சாரல் என் சட்டை பையை நனைத்து.
இன்னும் சொஞ்சம் பெரிய மழைக்கு பின்
குடையை எடுக்கலாம் என்று
அமைதியாக நனைந்தேன்(நடந்தேன்)

மழை வேகம் அதிகமானது.
நடை தளர்ந்தது.
இப்பொது, என் உடல் வழியே தண்ணீர்
தரை இறங்கியது.

குடையை எடுத்த போது வீடு வந்தது.
வாசலில் கொடூர கண்களோடு என் மனைவி.

குடை யை மறப்பதற்காக தினமும்
திட்டு வாங்கும் நான். அன்று
மறக்காமல் குடையை எடுத்து சென்றதற்க்காக !.....

Thursday, October 1, 2009

போலி விமர்சனம் !..


இந்த blog ஆரம்பித்த உடனே (முதலும் / கடைசியுமாக மிக சில

நண்பர்களுள், மிக சிலருக்கு மட்டும் தெரிய படுத்தினேன் ...)

அதை விமர்சம் செய்வதாக நினைத்து கொண்டு ஒருவன் சொன்னான், "கடைசியில் நீயும் அவன மாதிரியே ஆரம்பிச்சுடீயா ? அவனுக்கு இதுல நேரிய fans இருகாங்க. நீயும் அத பாத்து கத்துக்க ... என்று. "

நான் சொன்னேன் "யாரும் யார்ட்ட இருந்தும் எதும் கத்துக்க முடியாது (கத்து
கொடுக்கவும்)"

அப்டினா "இவன் தான் பாலா வா" திரும்ப படி - இது அவன்

நான் அந்த stage i கடந்து விட்டேன் - இது நான் ( அனாரியா வும் / தீன்டாத
வசந்தமும் படிசசுட்டு என்னால திரும்பவும் இவன் தான் பாலா எப்படி
படிக்க முடியும் .. )

அவன் படித்து முடித்த ஓஷோ வை - நீ இபொழுது தான் ஆரம்பித்து இருக்க - என்று அவன் கேட்டான்.

- என்ன இது ஒரு கேவலமான comparison... அப்படி பார்த்தால் "தண்ணீர் தேசத்தை யும் / வைரமுத்துவையும் உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது யார்னு உங்களுக்கும் எனக்கும் தெரியும்..

அதை எனை போலவே நீங்களும் மரந்திருபீர்கள் என்று நினைக்கிறேன்.....

உங்களின் அளவிடுதலும் / கற்று கொள்ளும் திறனும் எப்போதும் ஏன்
எதையாவது சார்ந்தே இருக்கிறதுன்னு எனக்கு தெரியல.

so

வாசிக்க வேண்டுமா வாசி. எழுத வேண்டுமா எழுது.. துங்க வேண்டுமா துங்கு..

புணர வேண்டுமா புனர். எப்போதும் அடுத்திருபவனை பார்க்காதே.. ஏனா

துங்கும் போது நீ தனியாக தான் துங்க முடியும்.............

Wednesday, September 30, 2009

ஏன் இதை எழுத தொடங்கினேன்...

காலை 5 மணி, அவசரமாக குளித்துவிட்டு, 10 நிமிட நடைக்கு பிறகு bus stand i அடைந்தேன். காலை 5 மணி என்பதால் driver உம், conductor உம் சாவகாசமாக வந்தனர். அவர்கள் டீ குடிக்கும் வரை காத்திருந்தேன். 1 மணிநேர பயணத்துக்கு பிறகு ameerpet கு வந்தேன். நான் வேலை பார்க்கும் company இல் இருந்து என்னை Sharepoint கற்று கொள்ள அனுப்பி இருந்தார்கள். (நம்மல பத்தி தெரியல பாவம்) .

class முடிந்து driver i போல நானும் சாவகாசமாக office ku வந்தேன். மணி 11.30. வீட்டில் இருக்கும் ம்னைவி நாபகம் தேவை இல்லாமல் வர 9.30 கு வீட்டுக்கு போனேன். (ஆபீஸ் ல என்ன பண்ணினேன்னு கேக்ககூடாது - அது தனி அத்தியாயம் ). ரொம்ப நாள் ஆச்சு, வாங்க கொஞ்ச நேரம் வெளில காத்தாட உக்காந்து பேசலாம் - நு சொன்ன அவ கிட்ட முகத்த காட்டி விட்டு, ஓஷோ வை கையில் எடுத்தேன். எனக்கு இன்னும் ஒரு காரணமும் இருந்தது. தேதி 30. இப்படியாக என் ஒரு நாள் கழிந்தது.

சில நாட்களாக (மாதங்களாக / வருடங்களாக) என் நண்பர்களுடனான இடை................................... வெளி அதிகமானது (காரணம் ஏதும் இல்லை - சொல்ல கூடிய அளவுக்கு).
so வேலை இல்லாத வெட்டி பொழுதுகளில் எனக்கு தோன்றின ஐடியாவால் , இடை வெளியை இனும் அதிகமாகும் முயற்சி தான் இது....


இடைவெளி அதிகமாகும்................................