Friday, December 11, 2009

ஏய் தோழா ! குடி கோலா !...

விளம்பர இடைவேளைகளுக்கு இடைல, t.v ல நேத்து ஒரு நிகழ்ச்சி பாத்துட்டு இருந்தேன்.
குடிகுறதுக்கு கஞ்சி இல்லாம, தொவச்சா கிழிஞ்சு போய்டும் அழுக்கு வேட்டியோட மல்லு கட்ற, நம்ம தமிழன பாத்து பெப்புசிய குடி, கோலாவ குடினு, நம்ம இளைய தளபதி பாடிகினு இருந்தாரு...
இவனுகளுக்கு பிளாச்சிமடைல , சொந்த நிலத்தோட நிலத்தடி நீர காப்பதுரதுக்காக இன்னைக்கும், நம்ம ஊரு போலீஸ் கிட்ட அடி வாங்கிக்கிட்டு, கோலாவுக்கு எதிரா போராடுற அப்பாவி பழங்குடி விவசாயிகள பத்தி கவலை இல்ல.
பெப்புசி,கோலானால, முடப்பட்ட எத்தனயோ சிறு தொழிற்சாலைகள பத்தியும், அந்த தொழிலாளர்களா பத்தியும் கவலை இல்ல.
நம்ம ஊரு தண்ணி , நாம ஊரு மூலதனம்,
நம்ம ஊரு தொழிலாளி ,நம்ம ஊரு இடம்,
வெறும் 40 பைசா செலவுல தயாரகுற ஒரு கருமத்த
10 ரூபாக்கு வாங்கி குடிச்சுட்டு , ஒட்டு மொத்த லாபத்தையும் அமெரிகவுக்கு அனுப்பிவைகுறதும் நம்ம ஊரு நாயகர்கள்.
இத பத்தியும் , எங்க இளைய தளபதிக்கும் ,சியானுக்கும் கவலை இல்ல .
ஏன் தலிவா, வேர்வ சிந்தி சம்பாதிச்ச காசுல,ஓம் படத்த பாத்துட்டு கை தட்ற குத்தத்துக்கு கண்ட கருமத்தை எல்லாம் குடிக்க சொல்லி ,வீட்டு முன்னாடி வந்து ஆடுறியே உனகெலாம் வெக்கமே இல்லையா.
தல நான் தெரியாமத்தேன் கேக்குறேன்,
யாரோ தெரியாத பசங்களுக்காக ஆட்டம் போடுற,
நம்ம சாதி சனம் ,இந்த மாப்ளை விநாயகரு சோடா,
காளி மார்க் கலர்க்கு ஒரு ஆட்டம் போட்டீனா ,
எதோ இல்லாத சனம் 2,3 ரூபாய்க்கு குடிச்சுபுட்டு சந்தோசமா இருப்போம்ல .
ம்ம் இதெலாம் உன் காதுல எங்க உளுகபோகுது , 50 லச்சத்துக்கு பெப்புசிய குடிக்க சொல்லலாமா?
1 கோடிக்கு கோலாவ குடிக்க சொல்லலாமா? 2 கோடிக்கு அமெரிக்ககாரனோட மூத்....... குடிக்க சொல்லலாமானு
யோசிச்சிகிட்டு இருப்பீங்க!
உங்கள சொல்லி குத்தமில்ல. கோக்கு இல்லாம மதிய சாப்பாடு சாப்பிட தெரியாத இந்த பயபிளைகல சொல்லனும்.
உங்க மேல எந்த தப்பும் இல்ல சாமி.
இதலாம் பாக்கும் போது, மதுரைல நான் படிச்சுகிட்டு, ஊர சுத்திக்கிட்டு இருந்தப்ப,கத்துகிட்ட ஒரு பாட்டு தான் நாபகம் வருது.

"நாடு முன்னேறுதுங்குறான் . நம்ம
நாடு முன்னேறுதுங்குறான். - அட
சினு சினு சினுக்கா,
மினு மினு மினுக்கா ,
செர்மன், அமெரிக்கா,,ஜப்பானு கணக்கா
நாடு முன்னேறுதுங்குறான்

தாகம் தீக்க கொக்க கோலா,
போத ஏத்த பாரின் சீசா,
மிக்சு பண்ணிக்க பெப்புசி லிகறு,
மித்த வேலைக்கெல்லாம் மினரல் வாட்டரு.
குடிக்க தண்ணி இல்ல, கொபளிக்க பன்னீரு
குடிக்க தண்ணி இல்ல, கொபளிக்க பன்னீரு
அடிரா செருப்பால வீங்கிபுடும் செவுலு. - நாடு
நாடு முன்னேறுதுங்குறான். நம்ம
நாடு முன்னேறுதுங்குறான்......"
- இப்படி தான் என்ன மாதீரி வெட்டி பயலுக வேலை இல்லாம
உசுபேத்தி விடுவானுக,
நீ ஆடு தலைவா...

Sunday, December 6, 2009

எனக்கு தெரிந்த ஒரு போராளி !

நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வெட்டியாய் பொழுதை போக்கி கொண்டிருந்த நாட்களில், பெண்ணியம், புரட்சி,சே, தலித்,மாவோ, எப்படி எத்தனை எத்தனையோ பினாத்தி கொண்டிருந்த, ஒரு பொழைக்க தெரியாத நண்பரின் அறிமுகம் அனாவசியமாக கிடைத்தது.
ஒரு NGO வில் தான் எங்களுக்கான புரிதல் தொடங்கியது.அவரின் பேச்சும், துடிப்பும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை தான்.ஒவ்வரு வாரம் சனி கிழமைகளில், விவாதிபதற்கு ஒரு தலைப்பு.அபோது அனேகமாக அவர் பேசுவது எதவும் புரியாது.கடமைக்காகவும் அவர் மீது கொண்ட நட்புக்காகவும் ஓட்டை பார்த்து கொண்டு உக்காந்து இருப்பேன்.
திண்டுக்கலுக்கும், மதுரைக்கும் தினமும் ரயிலில் பயண பட்டு வந்த என்னை பல இரவு பொழுதுகளில் மதுரை ரயில் நிலையத்தை சுற்றிலும், பெரியார் பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள பழைய புத்தக கடைகளுக்கு அவரின் சைகிலேலேயே அழைத்து சென்ற பெருமை அவரயே சாரும்.வைரமுத்து வை தவிர வேறொன்றும் வாசித்தறியாத இந்த கத்து குட்டிக்கு சே வையும் , அம்பேத்கரையும் அறிமுகபடுத்தினார்.
இத்தனைக்கும் தனக்கு ஒரு நிரந்தர வேலை கூட இல்லாமல் , இப்படி மக்கள் இயக்கங்களுக்காக அலைகிறாரே, இந்த ஆள், எங்க, வாழ்க்கைல முன்னேற போரார்னு நினைச்சு கிட்டே MCA படிக்க கிளம்பினேன். அப்பவும் அன்போட வழி அனுபிச்சு வச்சார்.
திருச்சிக்கு வந்த பிறகு,அவருடனான பரிச்சயம் கொறஞ்சது. ஆனாலும் அப்ப அப்ப போன்ல , என புக் படிச்ச அப்படினு விசாரிப்புகள் தொடர்ந்தது. வாழ்கையில எண்ணங்களும் , நோக்கங்களும் , ஒரு திட்டமிடுதலும் இல்லாத ஒரு சோம்பேறிய(நான் தான்) நம்பி ஒரு பொண்ணு வந்த போது, என் படிப்பு பாதி முடிஞ்சு இருந்தது. என்ன செய்யணும் னு தெரியாம, முதல போன் பண்ணி சொன்ன ஒரே ஆளு அவர் தான். அப்ப இருந்து என் கல்யாணம் (வேல கிடைச்ச பின்னாடி) முடிஞ்ச வரைக்கும் கூடவே இருந்த நண்பர்.
"பிரபாகரன் எனக்கு பிரபா சார்.." அவர எனக்கு தெரிஞ்ச 8 வருசத்துல துளி அளவு கூட அவரோட சொந்த வாழ்கை தரம் உயரல. ஆனா அவரோட செயல்பாடு, வாசிப்பு,கள பணி அதிகமாய்டே இருக்கு. பொண்ட்டாடி, பிளைகனு வந்த பிறகு கூட சொ(சோ)த்துக்கு வழி பண்ணாம, "போதி" னு ஒரு அமைப்ப ஏற்படுத்தி அங்க இருக்குற தலித் மாணவர்களுக்கு இலவசமா இங்கிலீஷ் ம், கம்ப்யூட்டர் ம் சொல்லி குடுக்குரதோட, அவுங்களுக்கான லைப்ரரி ஒன்னையும் ஆரம்பிச்சு இருகார்.
கடன் வாங்கி புத்தகம் வாங்குறதே பெருசா இருக்குற நமக்கு, வட்டிக்கு வாங்கி மக்கள் பணி நடத்துற இந்த ஆள பாத்தா பாவமா தான் இருக்கு. பேப்பர் கடைக்கு போடுற நமளோட பழைய புத்தகங்கள், பயன்படுத்துன கம்ப்யூட்டர், இன்னும் படிகுறதுக்கு உதவுற எல்லாத்தையும் இந்த அப்பாவிக்கு கொடுத்து உதவுங்கனு சொன்னா எவன் கேக்குறான். ("போதி" தொடர்புக்கு - BODHI 31.karumariyamman kovil st musiri.Trichy.dt 9942487859, 9444146273, 9791406600, 9994368508 )
இன்னைக்கு கூட அம்பேதரோட 53 நினைவு நாள்னு காலைல 6 மணிக்கே மெசேஜ் அனுப்பி இருந்தார். ம்ம் என்ன மாதிரி எதனபேத்துகு இப்படி அன்னுபுனரோ தெரியல. களத்துல எறங்கி சண்டை போடுரவனும், மக்கள் கள பண்ணிக்காக, குடும்பத்தோடும், வறுமையோடயும் சண்ட போடுற ஓவருதரும் ஒரு போராளி தான் !...