Thursday, October 1, 2009

போலி விமர்சனம் !..


இந்த blog ஆரம்பித்த உடனே (முதலும் / கடைசியுமாக மிக சில

நண்பர்களுள், மிக சிலருக்கு மட்டும் தெரிய படுத்தினேன் ...)

அதை விமர்சம் செய்வதாக நினைத்து கொண்டு ஒருவன் சொன்னான், "கடைசியில் நீயும் அவன மாதிரியே ஆரம்பிச்சுடீயா ? அவனுக்கு இதுல நேரிய fans இருகாங்க. நீயும் அத பாத்து கத்துக்க ... என்று. "

நான் சொன்னேன் "யாரும் யார்ட்ட இருந்தும் எதும் கத்துக்க முடியாது (கத்து
கொடுக்கவும்)"

அப்டினா "இவன் தான் பாலா வா" திரும்ப படி - இது அவன்

நான் அந்த stage i கடந்து விட்டேன் - இது நான் ( அனாரியா வும் / தீன்டாத
வசந்தமும் படிசசுட்டு என்னால திரும்பவும் இவன் தான் பாலா எப்படி
படிக்க முடியும் .. )

அவன் படித்து முடித்த ஓஷோ வை - நீ இபொழுது தான் ஆரம்பித்து இருக்க - என்று அவன் கேட்டான்.

- என்ன இது ஒரு கேவலமான comparison... அப்படி பார்த்தால் "தண்ணீர் தேசத்தை யும் / வைரமுத்துவையும் உங்கள் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது யார்னு உங்களுக்கும் எனக்கும் தெரியும்..

அதை எனை போலவே நீங்களும் மரந்திருபீர்கள் என்று நினைக்கிறேன்.....

உங்களின் அளவிடுதலும் / கற்று கொள்ளும் திறனும் எப்போதும் ஏன்
எதையாவது சார்ந்தே இருக்கிறதுன்னு எனக்கு தெரியல.

so

வாசிக்க வேண்டுமா வாசி. எழுத வேண்டுமா எழுது.. துங்க வேண்டுமா துங்கு..

புணர வேண்டுமா புனர். எப்போதும் அடுத்திருபவனை பார்க்காதே.. ஏனா

துங்கும் போது நீ தனியாக தான் துங்க முடியும்.............

5 comments:

  1. உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஜோன்ஸ் . ஏதோ சொல்வதற்காக சொல்வது போல் இருக்கிறது உங்கள் வார்த்தைகள்.

    சார்தலில்தான் நகர்கிறது வாழ்க்கை.
    உங்கள் அளவிடுதலும், கற்றுக் கொள்ளும் திறனும் எதையுமே சாராமல்தான் இருக்கிறது என நீங்கள் பொய் சொல்ல முடியாது.

    உணமைதான் ... வைரமுத்துவை என் வீட்டிற்கு கூட்டி வந்தது நீங்கள்தான். பாலாவையும் சேர்ந்துதான் பேசிக் கொண்டிருந்தோம்.

    இன்று நீங்கள் சொல்லும் அனாரியாவும் / தீண்டாத வசந்தமும்..... நாங்கள் கண்டறியாதது. நீங்கள் காட்டி கொடுக்க தவறி விட்டீர்கள்.

    "அனாரியா - னு ஒண்ணு படிச்சுகிட்டு இருக்கேன். நல்லா இருக்கு. நீயும் படிச்சு பாரு" ண்ணு சொல்றத நீங்க நிறுத்தீட்டிங்க. இப்போ எதிர் பாக்குறது தப்புன்னு சொல்லறிங்க. அது ஏன்னு யோசிக்காம... தனியாத்தான் தூங்கணும் னு புது தத்துவம் வேற ஒண்ணு சொல்றிங்க.

    அவன் கூட நீங்க பேசும்போது பக்கத்துலதான் நான் இருந்தேன். அவன் சொன்னதுல வார்த்தைய மட்டும்தான் எடுத்துகிட்டு இருக்கீங்க. அர்த்தத்த விட்டுட்டிங்க. பொதுவா, நாம ஒண்ணா நின்னு பேசிகிட்டு இருந்த போது, (இறந்த காலம்) எவ்வளவோ பேசுவோம். அர்த்தம் ஒழுங்கா புரிஞ்சுகிட்டு இருந்தது. இப்போ கொஞ்சம் கூட உங்களுக்கு புரிய மாட்டேங்குதே ஏன்?புரியாட்டியும் பரவா இல்ல, அது ஏன் தப்பு தப்பா புரியுது?

    இந்த இடைவெளி ஏன் விழுந்தது?
    உண்மையிலேயே விழுந்ததா நினைக்கிறிங்களா?
    அப்படியே இருந்தாலும், இதை யாரும் விரும்பலையே! இதை தூக்கி போட முடியாதா?
    தவிர்க்க முடியாத இடைவெளியா இது?
    இதை ஏன் அதிகமாக்க முயற்சி செய்யுரிங்க?
    இந்த இடைவெளி உங்களுக்கு தேவைப் படுதா?

    எவ்வளவோ வாசிக்குரிங்க. எவ்வளவோ தெரிஞ்சவங்க நீங்க. இந்த இடைவெளிய இப்படித்தான் கையாளுவிங்களா?
    இதில் எங்க இருந்து " ஈகோ " வருது? இந்த " நான் " நமக்குள்ளயுமா வரணும்?

    எனக்கு இதில் இஷ்டம் இல்ல.

    யோசிச்சு ஏதாவது சொல்லுங்க. நீங்க வேணும்னா தனியா தூங்க பழகி இருக்கலாம். நாங்க அந்த நிலைக்கு வருவோமா தெரியல. ஆனா வரப் பிடிக்கல...

    ReplyDelete
  2. வார்த்தைகளால் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது ! பக்கங்கள் வீணாவதை தவிர !!!!

    முதலில், உங்கள் சந்தோஷத்திற்காக நான் எழுதவில்லை. இது உங்களுக்கு
    சந்தோஷத்தையோ ( அல்லது வேறு எதையோ) தருவதற்கு நான் பொறுப்பல்ல.

    தூரம் என்பது தூரத்தை குறிக்காதது போல, சார்ந்து என்பதும் "சார்தலை"
    குறிக்காது

    வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக எடுத்துகொள்ள கூடாது என்று 'நீங்கள்'
    சொன்னால், அந்த வார்த்தைகள் எதற்கு என்று நான் கேட்கிறேன். (நான் பல
    நேரங்களில் மௌனமாக இருந்து விடுவதற்கான காரணமும் இது தான்).

    அனார்யா நல்லாருக்குனு - சொன்னால் நீங்க படிப்பீங்க, எத்தனை நாளைக்கு ?? (ஆரம்ப காலத்தில் சரி, இன்னும் ஆரம்பத்திலே தான் இருக்கீங்களா ?)

    உங்களுக்கான தேடல் உங்களுக்குள்ளே தான் ஆரம்பிக்க பட வேண்டும். (நான் சொன்ன சார்தல் இது தான்). உங்கள் வாசிப்பு / எழுத்து உங்களை சார்ந்து தான் இருக்க வேண்டும்.

    அது இன்னோருவரை attract பண்ணுவற்க்கோ / பெண்களிடம் பெருமை பேசுவதற்கோ / இன பிற .... இருந்தால் - உங்கள் வாசிப்பும் / எழுத்தும் எதயோ சார்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.

    தனியா தூங்க முடியாதுங்குறது என் தத்துவம் அல்ல. அது நான் நம்பும் எதார்த்தம் . எப்போ என் எதார்த்தம், தத்துவமாக தெரிகிறதோ, எப்பொழுது இடைவெளி அதிகரிக்கும்.

    குறிப்பு:
    இரண்டாவது முறை எனிடம் விளக்கத்தை எதிர்பார்காதீர்கள். ஏன்னா ப்க்கங்கள்
    வீணாவதை நான் விரும்ப வில்லை.

    ReplyDelete
  3. மன்னிச்சிடுங்க...

    திரும்ப திரும்ப தப்பு பண்ணி பழகிடுச்சு....

    முன்பு இருந்த பரஸ்பர புரிதல் இப்போ இல்லைன்னு தெரிஞ்ச பிறகும், அத எதிர் பார்க்குறது "தப்புதான்".

    " இனி (நீ)ங்கள் எனக்கு தேவை இல்லை " - னு சொல்றதுக்கு நீங்க "சார்தல்" போன்ற கனமான வார்த்தைகளை எல்லாம் எடுக்க தேவை இல்லை.

    சே சொன்னது சரி.
    //// வார்த்தைகளால் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது ! பக்கங்கள் வீணாவதை தவிர !!!! ////

    நீங்கள் சொல்லும் ஆரம்பம் தெரியும்... அது முடிந்தது எப்போதென்று புரிந்து கொள்ள
    முடியவில்லை என்னால்.... பின் தொடர்ந்தோ, அல்லது கூடவே வர விரும்பியதும் "தவறுதான்".

    எது எதற்கோ வார்த்தைகளை செலவிட்டு விட்டு (எ . கா )

    // அது இன்னோருவரை attract பண்ணுவற்க்கோ / பெண்களிடம் பெருமை பேசுவதற்கோ / இன பிற .... இருந்தால் - உங்கள் வாசிப்பும் / எழுத்தும் எதயோ சார்ந்து இருக்கிறது என்று அர்த்தம்.//

    நான் எழுதியதன் மூல காரணமான " இடைவெளி " பற்றி பேசாமல் வார்த்தைகளை சேமிக்கும் உங்களிடம் எப்படியாவது பழைய நேசத்தை பெற்று விடலாம் என எண்ணிக் கொண்டு பின்னூட்டம் இடுவதும் "தவறுதான்".

    "தீதும் நன்றும் பிறர் தர வாரா "
    - உங்கள் இந்த நிலைப்பாட்டிற்கு, நிச்சயம் நான்தான் காரணமாய் இருந்திருக்க முடியும். உங்களுக்கு இந்த இடைவெளி தேவைப் படும் பட்சத்தில், வேறென்ன கூற ???

    வாழ்த்துக்கள். (உங்கள் வாழ்த்துக்களுக்காக நாங்கள் இல்லை என்றெல்லாம் நீங்கள் பதில் கூற இம்முறை அவசியம் இல்லை.)


    நன்றி !!! எங்களை சகித்துக் கொண்டிருந்த நட்புக்கு.

    ReplyDelete
  4. ரொம்ப வருத்தப்படாதீர்கள் தாமு

    உன் கோபத்தை , நீ கோடிட்ட, என் எழுத்துகளில்
    இருந்தே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    ஒருவேளை என் வார்த்தைகளின் வெளிபாடு ,,,

    ""அன்பு, நியாயம்,காதல், துரோகம், நம்பிக்கை
    (என் order தப்பாக இருக்கலாம்)
    இவை எல்லாவற்றிலும் எனக்கு சுத்தமாக
    நம்பிக்கை(வேறு வார்தை கிடைக்காததால்) இல்லை.

    இதில் நம்பிக்கை குறைந்து வந்த காலத்தில்
    உன்னோடு ரயில் பயணத்தில் ஒன்றாக பயணித்த பெண்ணின்
    (தோழியாக கூட இருக்கலாம்) வலி
    நானறிந்த செய்தியால்................
    (யோசிக்க வேண்டாம், உனக்கும் நாபகம் இருக்கும்)

    then உன் தோழியர் வீட்டு நாய், குட்டி போட்டதற்காக
    நீ சென்னை இல் இருந்து திண்டுக்க்லுக்கும், மதுரைக்கும்
    மாறி மாறி அலைந்ததை நாங்கள் அறிந்த பொது.............

    உன்னுடன் தங்கிய நண்பர்களிடம் இருந்து வந்த
    உன் காதல் தொடர்பான பல வதந்தி (வைத்து கொள்ளலாம்) களால்............... ""

    (இவை அனைத்தும் நாம் ஏற்கனவே விவாதித்து இருப்பதால்,
    உன் தனிப்பட்ட விசயத்தில் என் பேனாவை நுலைத்ததற்காய்
    என்னை மனிப்பு கேட்க சொல்ல மாட்டாய் என்றே நம்புகிறேன்)

    - கூட இருக்கலாம்....

    So,

    உங்கள் வார்த்தைககளும் / வாசிப்பும் / எழுத்தும்
    உங்களை உண்மையில் சந்தோஷ படுத்துமானால்
    உங்களை விட சந்தோஷ படும் ஒருவனில்
    கண்டிப்பாக நானும் இருப்பேன்.
    ஒவ்வரு மனிதனையும் தாண்டி
    வாழ்கையும், உலகமும் நீண்டு கொண்டே இருப்பதால்.
    எபோது வேண்டுமானாலும்(நீங்கள் விரும்பினால்)
    என்னை சந்திக்கலாம்.
    திருட ஒன்றும் இல்லாத வீட்டில் கதவுகள் முடப்படுவதில்லை.

    ReplyDelete
  5. நண்பர்களே..
    தனித்து விடப்பட்ட இந்தக் காட்டில்...
    உங்களைப் போல் இல்லாத ஒருவன் புன்னகைக்கிறான்..
    இது உங்களுடையதைப்போல் அரசியல் இல்லாதிருக்கிறது ..
    எளிய உண்மையான புன்னகையை எதிர் கொள்வதும், பதில் செய்வதும் பதற்றமாய் இருக்கிறது.
    அவன் உங்களைப்போல் சித்தாந்தங்கள் அறிந்திருக்கவில்லை.. புரட்சிகள் பேசுவதில்லை.
    இன்னமும் அவன் என் வார்த்தைகளின் உள் வெளி அர்த்தங்களை பற்றி கவலைப்படுவதில்லை.
    என் வார்த்தைகளை மட்டுமே திரும்ப பேசுகிறான்.. அல்லது நான் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறேன்.
    எது சரி? யார் ஜெயிப்பது? மற்றும் இன்ன பிற பிரச்சினைகள் அவனுக்கு இல்லை.
    நீங்கள் திரும்ப வரும் போது உங்களிடம் அவனைப்போல் நடந்துகொள்ள முடிவு செய்கிறேன்..
    உங்களைப்போல் இல்லாதவன் விடைபெறுகிறான்.. இன்னமும் இன்னமும் உண்மையான சிநேகத்தோடு..
    உங்களைப்போன்ற நான் இன்னொரு நாடகத்துக்கு தயாராகிறேன்... உண்மையாகப் புன்னகைக்கும் பாவனையோடு

    ReplyDelete